நடிகர் அருண் பாண்டியன் (ஐங்கரன் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவர்) இல்லத் திருமணம் நேற்று சென்னை கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஹோடல்லில் நடைபெற்றது. திருமணத்தில் சூப்பர் ஸ்டார் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அட்டகாசமான ப்ளூ ஜீன்ஸில் ஒயிட் ஜிப்பா ஷர்ட்டுடன் பளிச்சென்று சூப்பர் ஸ்டார் வந்தாராம்.
நேற்று மாலை சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சி நடைபெறும் ஹோடல்லுக்கு வந்து, ரிஷப்ஷன் நடைபெறும் அரங்கிற்கு செல்ல படியிறங்கும்போது (குசேலன் கேசட் விழா நடைபெற்றதே, அதே இடம் தான்) நடிகர் பாக்யராஜ் தனது குடும்பதினருடன் நிகழ்ச்சியை முடித்துவிட்டு மேலே வருகிறார். பாக்யராஜை பார்த்தவுடன் சூப்பர் ஸ்டார் மலர்ச்சியாகி, நின்று அவருடன் கை குலுக்கி நலம் விசாரித்தார். சூப்பர் ஸ்டாரை பார்த்த சந்தோஷத்தில் பாக்யராஜ் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் திளைக்க, சூழ்ந்திருந்த புகைப்படக்காரர்கள் க்ளிக்கித் தள்ளினர். பின்னர் சூப்பர் ஸ்டார் அவர்களிடம் விடைபெற்று உள்ள சென்று விட்டார். பாக்யராஜுடன் பேசிகொண்டிருந்தபோது நிகழ்ச்சியை முடித்துவிட்டு பாதுகாவலர்கள் புடை சூழ (?!!) கடந்து சென்ற டி. ராஜேந்தரை சூப்பர் ஸ்டார் கவனிக்கவில்லை. (அல்லது கண்டுகொள்ளவில்லையா?)
உள்ள சென்று மணமக்களை மேடைஏறி வாழ்த்திவிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு, இறங்கினால் எதிரே - டி. ராஜேந்தர். சூப்பர் ஸ்டாரை பார்த்து ஒரு வழி வழிந்துவிட்டு கை குலுக்கி பேசிகொண்டிருந்தார் சில நிமிடங்கள். ரஜினியும் எந்த வித துவேஷ சிந்தனையும் இன்றி அவருடன் முகம் கொடுத்து பேசினார். நலம் விசாரித்து தோளை தட்டி கொடுத்தார்.
அங்கிருந்த நம் நண்பர்கள் கூறியதாவது - மேலே சென்ற டி. ஆர்., தான் ரஜினியை மிஸ் பண்ணிவிட்டதை உணர்ந்து மறுபடியும் கீழே படிகள் இறங்கி ஹாலுக்குள் வந்து கை குலுக்கி விட்டு சென்றாராம். அது!!
பொது இடத்தில் நாகரிகத்தை பேணிக்காத்த இருவரையும் பாராட்டுவோம். (தலைவர் இது போன்ற பாராட்டுகளுக்கு அப்பாற்பட்டவர். அது வேறு விஷயம்!)
குறிப்பு: ரோபோ பூஜை செப்டம்பர் முதல் வாரம் நடைபெறும் என்று கோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Source - onlyrajini.com
செய்திகள், எண்ணங்கள்
14 years ago
No comments:
Post a Comment