Tuesday, August 19, 2008

“Baba was not a flop” - theater owners affirm after 6 years!!



“Even before we ask for refund in Baba, Rajini himself returned the amount. Now we say, actually Baba was not a flop. But for that itself, Rajini compensated us. Now we want this issue (Kuselan loss) to bring to his notice and also make him aware the actual dealings behind this project.”

Do you know who uttered the above dialogue and where? A theater owner in recent Exhibitors’ press meet on Kuselan loss.

From this it is very clear that theatre owners cheated Rajini and got the refund for Baba. So, shall we expect the same for Kuselan too after some years?

How shall we forget the atrocities that Superstar faced for this unattained failure…?? How shall we forget the media mockery for this fake flop…?

Now you people are not willing to give Kuselan a breathing space and before it completes its run, you are coming halfway to claim loss…what an irony!

The same exhibitors earned so so much from Chandramukhi and Sivaji by cheating distributors and government with high ticket rates than prescribed actually for the entire first week. We are now punished by divine law just because we wathced your cheatings with our folded hands also for supporting you.

You all forgot about the earnings you made with Superstar’s movies and have now cut the throat of that great artiste who made your lives happier.

If you have any regrets over the Kuselan deal - you should have sorted out that within yourselves. How come you invite media to exhibit that? If you approach straightly - surely Superstar would have paid attention to your demands.

Even you face any trouble in future - definetely our thalaivar will lend you a hand. Because he is a “Great Soul”

பாபா தோல்விப்படம் அல்ல! 6 வருடங்கள் கழித்து திரையரங்கு உரிமையாளர்கள் ஒப்புதல்!!

//பாபா படத்தில் நாங்கள் கேட்காமலே கூப்பிட்டுப் பணத்தைக் கொடுத்தார் ரஜினி. இப்போது சொல்கிறோம், பாபா தோல்விப் படமல்ல. அதற்கே நஷ்ட ஈடு கொடுத்தவர்தான் ரஜினி. அப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதரின் காதுகளுக்கு இந்த விஷயம் போக வேண்டும், இந்த வியாபாரத்தில் நடந்த உண்மையான விஷயங்கள் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு.// இப்படி சொன்னது யார், எங்கு தெரியுமா?

ஒரு திரையரங்கு உரிமையாளர் சமீபத்தில் நடந்த குசேலன் தோல்வி குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பில்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? பாபாவில் - அடையாத தோல்விக்கு - ரஜினியை ஏமாற்றி மேற்படி திரையரங்கு உரிமையாளர்கள் பணம் வாங்கியுள்ளனர். தற்போது உண்மை வெளியாகியிருக்கிறது.



பெறாத தோல்விக்கு - ரஜினி எத்தனை அவமானங்களை சந்தித்தார்? எவ்வளவு ஏளன பேச்சுக்கள்…எத்தனை ஆரூடங்கள்….

இன்றைக்கு குசேலன் வெளியாகி - அது ஓடுவதற்கு கூட நேரமளிக்காமல் நஷ்டம் என்று வந்து நிற்கிறீர்களே, உங்களுக்கெல்லாம் மனசாட்சி என்ற ஒன்று கிடையாதா?

சிவாஜி படத்தில் மேற்படி திரையரங்குகள் சிவாஜிக்காகவும் சந்திரமுகிக்காகவும் ரஜினி ரசிகர்களிடம் அடித்த கொள்ளை இருக்கிறதே…அப்பப்பா பகல் கொள்ளை அது…அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகபட்ச கட்டணம் முதல் ஏழு நாட்களுக்கு வசூலிக்கப்பட்டது- விநியோகஸ்தர்களையும் அரசையும் ஏமாற்றி. அவர்கள் கொள்ளையை கை கட்டி பார்த்ததோடல்லாமல் அதற்க்கு உடந்தையாகவும் இருந்ததின் பலன் தான் ரஜினி ரசிகர்கள் இன்றைக்கு அனுபவிப்பது.

ஒவ்வொரு திரையரங்கமும் எவ்வளவு சம்பாதித்தனர்… (கணக்குப்படி மற்றும் கணக்கு இல்லாமல்.) அதையெல்லாம் நொடியில் மறந்துவிட்டு - உங்களை வாழ்வித்த மகிழ்வித்த ஒரு கலைஞனை இப்படி கழுத்தருத்துவிட்டீர்களே…

இவர்களுக்கு உண்மையில் ஏதாவது குறை இருக்குமானால், அதை கொஞ்சம் பொறுமையாக கையாண்டு - நான்கு சுவற்றுக்குள் - ரஜினியிடம் நியாயமாக ஒரு கோரிக்கை வைத்திருந்தால் - நிச்சயம் நீங்கள் பாராட்டுக்குரியவர்கள். ஆனால் ரகசியமாக கையாள வேண்டிய ஒரு விவகாரத்தை இப்படி மீடியா முன் வெளிச்சம் போட்டு காட்டி - ரஜினியை கூறுபோட்டு விட்டீர்களே…இது தர்மமா? காலம் பதில் கூறும்!!

உங்களை தூண்டிவிட்ட சக்திகள் நாளை உங்களுக்கு வேறு வகையில் ஒரு பிரச்னை வந்தால் ஓடி ஒளிவர்…ஆனால் அன்று கூட ரஜினியை நீங்கள் பார்த்து “அபயம்” என்று அலறினால் - கை கொடுப்பார் எங்கள் தலைவர்.

ஏனெனில் அவர் ஒரு அதிசயப்பிறவி.

Source - onlyrajini.com

No comments: