Saturday, August 23, 2008

Lion wins a lonely battle yet again!



சிங்கம் சிங்கிளாகவே ஜெயித்துவிட்டது!

ஆம்… கடவுள் நிறைய சோதித்துப் பார்த்து கடைசியில் கைவிடாமல் ரஜினி என்ற நல்லவரைக் காப்பாற்றியிருக்கிறார். (ஆனாலும் இது ஒரு தற்காலிக காப்பாற்றல்தான். இன்னும் நிறைய சோதனைகள் காத்திருக்கின்றன. அதற்கு முன் ரஜினி செய்ய வேண்டிய காரியங்களும் நிறைய உள்ளன. அடுத்து வரும் பதிவுகளில் அவற்றைப் பார்க்கலாம்.)

பேராசை பிடித்த திரையரங்கு உரிமையாளர்களின் நச்சரிப்பு மற்றும் மீடியாக்களின் பொய்ப் பிரச்சாரங்களை முழுமையாக நிறுத்த ரஜினியே முன் வந்து திரையரங்கு உரிமையாளர்களின் பிரிதிநிதிகளைச் சந்தித்து ஒரு சமரசத் தீர்வு கண்டிருக்கிறார்.

திரையுலகின் பவர்புல் அமைப்புகள் என்று பீற்றிக்கொள்ளும் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் கவு்சில், பிலிம் காட்டும் பிலிம் சேம்பர்… போன்ற அமைப்புகளின் தயவில்லாமல் தனியாகச் சாதித்திருக்கிறார் ரஜினி இம்முறையும்.

இதுபற்றிய செய்தியின் முழு வடிவத்தையும் அப்படியே தருகிறோம். அதற்கு முன் சில விஷயங்களில் ஒரு தெளிவு காண்பது நல்லது.

இனி விஜய், அஜீத், கமல் படங்களுக்கும் இதே சுறுசுறுப்பைக் காட்டுவார்களா தியேட்டர்காரர்கள்…. (மும்பை எக்ஸ்பிரசுக்கு என்ன கணக்கு?)

விஜயகாந்தின் 7 படங்கள் வரிசையாகத் தோல்விப் படங்களே… இந்த நஷ்டம் எப்படி ஈடுகட்டப்பட்டது என்ற பேருண்மையைச் சொல்வார்களா…

வெற்றிப் படங்களுக்கு பதில் வெற்றுப் படங்களை மட்டுமே தந்து கொண்டிருக்கும் சரத்குமாரின் படங்களை திரையிடும் போதும் இந்த நடைமுறை தொடருமா…

மேலே நாம் கூறிய அத்தனை நடிகர்களின் தோல்விப் பட நஷ்டங்களையும் ஈடு கட்டியவை ரஜினியின் படங்கள்தான். இன்று அவர் படத்துக்கே பொய்க் கணக்கு காட்டி நஷ்ட ஈடு கேட்டு மிரட்டிப் பார்க்கிறார்கள் தியேட்டர்காரர்கள்.

எல்லாம் நேரம்தான்…
vinojasan.blogspot.com



இனி அதிகாரப்பூர்வ செய்தி- (From thatstamil.com)

குசேலன் விவகாரம் – சுமூகமாக முடித்து வைத்த ரஜினி!!

ஒரு வழியாக குசேலன் பட விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டது. குசேலன் படத்தின் நாயகன் ரஜினியே முன் நின்று இந்த நஷ்ட விவகாரத்தில் சுமுகமான தீர்வு கண்டு, திரையரங்க உரிமையாளர்களையும் திருப்தியோடு அனுப்பி வைத்திருக்கிறார். ஆனாலும் சிலரது அதிருப்தி முணுமுணுப்புகள் ஓய்ந்தபாடில்லை…!

இந்தப் படத்தைத் திரையிட்ட பிரமிட் சாய்மிரா நிறுவன திரையரங்குகள் தவிர, மற்ற திரையரங்குகளின் உரிமையாளர்கள் தாங்கள் செலுத்திய மினிமம் கேரண்டி தொகையை எடுக்க முடியாமல் நஷ்டத்துக்கு உள்ளானதாகக் குரல் எழுப்பினர்.

படம் வெளியாகி 23 நாட்கள் மட்டுமே முடிந்திருந்த நிலையில், படம் ஓட அவகாசம் தராமல், மக்களைப் படம் பார்க்க வரவிடாமல் தடுக்கும் வகையில் தியரையரங்க உரிமையாளர்கள் வேண்டுமென்றே பிரச்சினை செய்வதாக தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டினர்.

பதிலுக்கு, இந்த தயாரிப்பாளர்களுக்கு எதிர்வரும் நாட்களில் ஒத்துழைக்க மாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் எச்சரித்தனர்.

இந்நிலையில் சென்னையில் திரண்ட இவர்கள் அனைவரும், தங்கள் நஷ்டத்தை ஈடுகட்ட ரஜினிகாந்த் உதவ வேண்டும் எனக் கோரினர்.

நேற்று மாலை ரஜினிகாந்தை அவரது அலுவலகத்தில் சந்தித்த திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள், தங்களுக்கு 70 சதவிகித மினிமம் கியாரண்டி தொகையைத் திரும்பத் தரவேண்டும் எனக் கோரினர்.

இறுதியில் பிரமிட் சாய்மிரா அல்லாத திரையரங்குகளுக்கு மட்டும் விற்கப்பட்ட தொகையைக் கணக்கிட்டு, அவர்களிடம் பெற்ற மினிமம் கியாரண்டி தொகையில் 33 சதவிகிதம் வரை அதாவது 7 கோடி ரூபாய் வரை திருப்பித் தர ஏற்பாடு செய்வதாக ரஜினிகாந்த் உறுதியளித்துள்ளார். அதை பன்னீர்செல்வம் தலைமையிலான திரையரங்கு உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகளும் ஏற்றுக் கொண்டதாகத் தெரிவித்தனர்.

இந்தத் தொகையை ரஜினிகாந்த் செலுத்த வேண்டியதில்லை என்றும் தயாரிப்பாளர்கள் மற்றும் பிரமிட் சாய்மிராவிடமிருந்து வாங்கிக் கொடுத்தால் போதும் என்றும் இந்தப் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.

ஆனால் பாலச்சந்தரிடம் எக்காரணம் கொண்டும் பணத்தைக் கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும், தானே அந்தப் பணத்தைக் கொடுத்து விடுவதாகவும் ரஜினி கூறியதாக திரையரங்க உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

தற்போது பிரமிட் சாய்மிரா மற்றும் ஜிபி விஜயகுமார் இருவரும் இந்தத் தொகையில் ஒரு பகுதியைத் தர முன்வந்துள்ளனர். இதைத்தவிர பிரமிட் சாயம்மிராவின் சரோஜா படத்தையும் குறைந்த விலையில் தர ஒப்புக் கொண்டுள்ளார்களாம். நஷ்ட ஈடு வேண்டாதவர்களுக்கு மட்டும் சரோஜாவை முழுவதும் இலவசமாகத் தருவதாகத் திட்டம்.

ஒரு பிரிவினர் எதிர்ப்பு:

இந்நிலையில் இந்த சமரசத் தீர்வுக்கும் சில திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தங்களுக்கு 75 சதவிகித தொகை வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.
திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கைக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்து, தான் ஒரு சிறந்த மனிதன் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் ரஜினி.

ஆனால் இதையும் ஒப்புக்கொள்ளாமல் பிரச்சினை செய்தால், மேற்கொண்டு கடுமையான நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் ஜி.சேகரன் தெரிவித்துள்ளார்.

No comments: