ஒரு நல்ல மனுசன எவ்வளவுதான் சோதிக்கிறதுன்னு அளவில்லையா... இது அநியாம்ணே என்கிறார் வடிவேலு.
ஒகேனக்கல் விவகாரத்தில் அடுத்தடுத்து அந்தர் பல்டி அடித்த ரஜினிக்கு எழுந்துள்ள கண்டனத்துக்கு எதிராகத் தான் இப்படிக் கொதிக்கிறார் வைகைப் புயல்.
அவர் கூறியிருப்பதாவது:
தமிழ் சினிமா, தமிழ் மக்கள் நல்லாயிருக்கணும்னு எப்பவுமே சொல்றவர் அண்ணன் ரஜினி. அவரைப் போயி இப்படியெல்லாம் பேசுறாங்களே நம்மாளுங்க... ரொம்ப வருத்தமா இருக்குண்ணே...
யாருக்கு எப்போ வாய்ப்புக் குடுக்கணும்னு சரியா புரிஞ்சு, தெரிஞ்சு வச்சிருக்கிறவர் ரஜினி. அவர் என்னிக்குமே நம்ம ஆளுதாங்க. அவரை வேற மாநிலத்துக்காரரா பாக்கிறதே தப்பு.
யாரைப் பத்தி யார் பேசறதுன்னே ஒரு வரைமுறை இல்லாமப் போயிடுச்சி... அதனாலதான் போற வாரவிங்கெல்லாம் ஒரு கல்ல விட்டெறிஞ்சிட்டுப் போறாய்ங்க.
பெங்களூர்ல குசேலன் ஓடலன்னா அவருக்கு என்னங்க நஷ்டம்? அவருக்கென்ன கன்னட ரைட்ஸூக்கும் சேர்த்தா காசு கொடுத்தாய்ங்க. அவருக்கு இதுல சம்பந்தமே இல்ல என்கிறார்.
http://thatstamil.oneindia.in/movies/specials/2008/08/06-vadivelu-on-rajini-issue.html
No comments:
Post a Comment